Tuesday 7 February 2012

நலனற்றுப்போதல்..

மேனி குளிர்ந்து மென்காற்றில்
புல்லரிக்க
ஊனத்தசை எல்லாம்
உன் மணியின் ஓசையினில்
ஞானத்தசையாகி நமைய
வாசலிலே
நான் வந்து நிற்கின்றேன்
நல்லூரா! மனசெல்லாம்
ஏதென்றியம்பேலா இன்ப
அதிர்வலைகள்,
ஓங்கிக்கை கூப்பி
உள்ளிருப்பை ஒருப்படுத்தி
தாங்கேலா நினைவெல்லாம்
தளர்த்த, உள்ளிருந்து
ஓடிவரும் காற்றுயிர்பெற்று
இரு செவியின் கரைவழியால்
மெல்லக்கரையும்
ஓங்காரம்
உள்ளெரிந்துயர்ந்து உருவாடும்,
மணிவேலா..!
”நான் இறப்பேன் இருப்பேன்
நலனற்ற நானாவேன்
ஏன் என்ற ஏதுமற்றுப்போவேன்”
இனி மேலும்
உன் வாசல் வந்தேகும்
போது..

No comments:

Post a Comment