Tuesday 7 February 2012

பார்வைகள்..

உலகாளுவோரின் ஒருபார்வை வேண்டி
உயிர்வேகும் எங்கும் ஒருகூட்டம்
நிலம்நோக்கி மெல்லத்தலை நோண்டி
நெஞ்சின்முகம் நோக்கிடாது ஒருகூட்டம்
வளமான சொல்லின் வகைதேடின் வீச்சு
வருமாமோ கண்ணின் ஒருபேச்சில்..?
இளமாதர் அண்மை இனிக்காது பார்வை
இருக்காத போதில் இழுக்காது,

இரவோடுகூடல் இணைகின்றபோதில்
எழுகின்ற கொற்றம் எதுவென்றால்
ஒருவாறு மெல்ல விழிபார்த்து செல்ல
மொழிபேசுகின்ற முனகல்தான்

எமதோர்கள் வைத்த காமாட்சி என்ன
ஒளிர்கின்ற சின்ன விளையாட்டா..?
தமதுண்மை கண்டு தமைஉண்டு கொண்டு
தகவன்மை கொண்டு பெறும் திருவாழ்வே

உலகத்துவாழ்வின் ஒருகோடிஇன்பம்
ஒளியூடு ஓடிஉயிராகி
நிலை பெற்றவாழ்வு நிறைவுற்று நல்ல
கவியாகி தெய்வ மொழியாகும்

கலையான பார்வை கனமானபார்வை
கதிதேடும் பார்வை எனவாக
பலவேறு பார்வை பலவாகும் வாழ்வின்
பலமான பார்வை பதிவாகும்.

No comments:

Post a Comment