என் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..
மைபடு விரலால் முறியாது இரும்பு
பொய்ப்பெட்டி ஓலையில்
பிறக்காது புயல்,
தாள்எண்ணித் தளையறுத்த
இனம் உண்டோ வையத்தில் ?
எண்ணிக்கை அவையில்
எரியாது விடுதலை,
எஃகுரசு, அனல்விதை, தளையறு
இரப்போர் வழியே பிழை
வீணவை விடுத்து வெளிவா
களமே வழி, குருதியே விதை
காண்..