காலி செய்த வீடு
சுவரில் தொங்கும் படத்தில்
காற்று அசைக்கும் முகம்
-
இலை உதிர்ந்த மரம்
கிளைகளில் தங்கும்
மழையின் கண்ணீர்
-
அலை கொண்டு செல்கிறது
கரையில் எழுதிய
குழந்தையின் பெயர்
-
நெருப்பின் சாம்பலில்
மீண்டும் எழுகிறது
காற்றின் நினைவு
-
கண்ணாடி உடைந்தது
துண்டுகளில் தெரிகிறது
ஒரே நிலவு
No comments:
Post a Comment