Wednesday 26 June 2013

தன்னிலை அறுதல்..

விலங்கு, இருட்டறை
உயிர் குதறும் வதை
அவனால் தாங்க முடிந்தது

ரோந்துக் கப்பல், சுடுகலன்,சிதைந்த உடல்
சிதையாத மனம்
கடலைத் தாண்டி இருந்தான்

மீண்டும் விலங்கு, வதை, சிறை
உயிரில் தினவு
கண்டம் கடந்தான்

அடர்ந்த பனி, அறியாத தேசம்
அடரிருட் சிறை, எப்படித்தானோ?
ஆனால் எழுந்து வந்தான்

தனித்த தீவு, முடியாத் தடுப்பு
நீளும் காலம், தொடரும் பிரிவு
நீண்ட தனிமை ஆமாம் மிக நீண்ட,
வெறுமையுந்தான்.

எதிலும் தடுமாற்றம்
எழுத்துகள் மறந்து போகிறது
கத்தியைப் பார்த்தால்
கழுத்தை அறுக்கவும்
கடலைப் பார்த்தால்
பாய்ந்து குதிக்கவும்
ஒருவேளை
மனதும் சிதையத் தொடங்கி இருக்கலாம்
எவ்வளவைக் கடந்திருந்தாலென்ன
திடீரென ஒருநாள் நிகழலாம்
தன்னிலை அறுந்து
தற்கொலை..







1 comment:

  1. "திடீரென ஒருநாள் நிகழலாம் // தன்னிலை அறுந்து // தற்கொலை.." - என்கிறீர்களே நண்பரே! வேண்டாம். வேறு எதுவுமே இல்லையென்றாலும், தமிழ்க் கவிதைக்காகவாவது நீங்கள் உயிர் வாழ்ந்தாக வேண்டும். இதை மறவாதீர்கள். உங்கள் கவிதை காலம் கடந்து நிற்கும் என்பது உறுதி.- கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete